News Just In

11/08/2021 06:39:00 AM

பாடசாலை மாணவர்களுக்கு தனியான சுகாதார வழிகாட்டல் தேவை - விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா

பாடசாலை மாணவர்களுக்கு என பிரத்தியேகமான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தயாரித்து அதனை முறையாக செயற்படுத்தவேண்டும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

பாடசாலைகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகுவதை தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இததொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கு என தனியான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டு, அதனை முறையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக பாடசாலை வகுப்பறையில் உணவு எடுத்துக்கொள்ளும்போதும் நீர் அருந்தும்போது ஒருவரில் மற்றவர் தூரமாகி அதனை மேற்கொள்ள, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலாேசனை வழங்கவேண்டும்.

ஏனெனில் ஒன்றாக சாப்பிடுதல் மற்றும் நீர் அருந்துவதன் மூலம் பல சிறுவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக  தகவல் கிடைத்திருக்கின்றது. விசேடமாக வகுப்பறைக்கு வெளியில்  பிரத்தியேகமான ஒரு இடத்தில் உணவு எடுத்துக்கொள்வதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால், அது மிகவும் நல்லது.

உணவு எடுக்கும்போதும் போத்தல்களில் நீர் அருந்தும்போதும் மாணவர்கள் கூட்டாக செயற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள் மீண்டும் மூடப்படால் தொடர்ந்து நடத்திச்செல்வதற்கு, சுகாதார வழிகாட்டல்கள் பாடசாலைகளில் முறையாக செயற்படுத்தவேண்டும் என்றார். 

No comments: