News Just In

11/08/2021 06:27:00 AM

கல்குடா முஸ்லிம் ஆசிரியர் அமைப்பின் 33 ஆவது வருட நிறைவு விழா!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 1988 ஆம் ஆண்டு 08 ஆம் மாதம் 22 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர்களின் 33 ஆவது வருட நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (7) மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

1988 இல் நியமனம் பெற்ற கல்குடா முஸ்லிம் ஆசிரியர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தலைவர் எம்.எல்.எம்.சபூர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அத்துடன், இந்நிகழ்வில் விசேட அம்சமாக நிறைவு விழா கொண்டாடிய 43 ஆசிரியர்களின் படைப்புகள் மற்றும் கல்விப் பணிகள் தாங்கிய "ஞாபகவெளி'' எனும் நினைவு மலரொன்று வெளியிடப்பட்டதுடன், இவ் அமைப்பில் இருந்து மரணமடைந்த மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.புஹாரி மற்றும் ஆசிரியர் எம்.ஏ.நூர்தீன் ஆகியோர்கள் நினைவு கூறப்பட்டனர்.

இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் மற்றும் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.ஏ.காதர், எம்.சுபைர், எம்.எஸ்.கலீல் ரஹ்மான் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்





No comments: