இதன்படி, இன்று(14.06.2021) திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மட்/இந்து கல்லூரியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தாவால் திணைக்கள ஊழியர்களுக்குமாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் மற்றும் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று மாத்திரம் 672 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்ட இடங்களில் அதிகளவிலான முதியோர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தமக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதனை காணக்கூடியதாக இருந்தது.















No comments: