News Just In

6/16/2021 07:25:00 PM

தகவலறியும் சட்டத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் அதனை பயன்படுத்த வேண்டும்...!!


எப்.முபாரக்
தகவலறியும் சட்டத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் அதனை பயன்படுத்த வேண்டும் என ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா அமைப்பின் திட்ட அதிகாரி திருமதி பிரியா போல்ராஜ் குறிப்பிட்டார்.

மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயலமர்வில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒன்லைன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆசிய பவுண்டேசன் அமைப்பின் ஆதரவுடன் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் தலைமையில் (16) காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இப்பயிற்சி பிற்பகல் ஒருமணியளவில் நிறைவடைந்து.

பிரதேச சபையின் மக்கள் பங்களிப்புடனான ஆழுகையை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக சபையின் வெளிப்படைதன்மையை மேம்படுத்தும் கையில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வில் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஆருஸ்.செயலாளர் செல்விவி.சத்தியஜோதி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்ச.முரளிதரன் உள்ளிட்ட 20 பேர் வரை கலந்து கொண்டனர்.

இங்கு தகவலறியும் சட்டத்தை எவ்வாறு மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி ஆராயப்பட்டது. இங்கு வளவாளர்களாக ரான்ஸ்பேரன்சி அமைப்பின் அதிகாரி கிருபைராஜா கௌரீஸ்வரன் தலமையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

எமது நாட்டின் தகவலறியும் உரிமைச் சட்டம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறப்புக்களை கொண்டுள்ளது. உலகில் நான்காவது இடத்தில் உள்ளது அதனை இந்த நாட்டின் ஊழலை ஒழிக்க நாம் பயன்படுத்த முடியும் எனவும் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.




No comments: