News Just In

6/16/2021 07:01:00 PM

பாடசாலைகளை விரைவில் திறக்க கல்வி அமைச்சு விருப்பம்- கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!!


பாடசாலை மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பாடசாலை விரைவில் திறக்க அரசு விரும்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். எனினும் பாடசாலைகளை விரைவில் திறக்க கல்வி அமைச்சு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நோக்கத்திற்காக சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், அவ்வாறு பாடசாலைகளை மீளத் திறக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக் கலந்துரையாடல்கள நடத்தப்படும் என்றும் கூறினார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பை மேற் கொண்டார். இக்கலந்துரையாடலில் மாகாண அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

“கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக நாங்கள் அனைத்து பாடசாலைகளையும் மூட வேண்டியிருந்தது. இருப்பினும், ஒன்லைன் கல்வி என்பது எந்த வகையிலும் ஆசிரியகள் வகுப்பறையில் மேற்கொள்ளும் கற்பித்தலைப் போன்று திருப்திகரமானதல்ல.

(பாடசாலைகளைத் திறப்பபத்கு) ஆயத்தப்படுத்த நீண்ட நேரம் எடுக்கும். விசேட மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன் முதல் படி கல்வித் துறைசார்ந்த அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதாகும் என்றார்.

கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவை. தடுப்பூசி ஆசிரியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பெற்றோரின் நம்பிக்கையையும் வளர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று கல்வி அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பரீட்சைகள் நடாத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. எனினும் அவ்வாறான தீர்மானங்கள் எதுவும் இன்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: