ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும், பொலிஸ் பேச்சாளரின் பணிகளும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகரி ஒருவர் தெரிவிக்கையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவொன்றுக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இன்று ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலக பணிகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இனி பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் பொலிஸ் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலகம் முன்னெடுத்த தகவல் வழங்கும் பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திட்டத்துக்கு அமையவே பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
11/27/2019 08:33:00 PM
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: