News Just In

11/27/2019 07:46:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தை அச்சுறுத்திவரும் டெங்கு நோய் தாக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 15ம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையும் 100 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 01ஆம் திகதியில் இருந்து இதுவரை 1519 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஆரையம்பதி 04பேர், களுவாஞ்சிகுடி 07 பேர், செங்கலடி, வவுணதீவு தலா10 பேர்இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் மொத்தமாக100 பேர் மட்டக்களப்புமாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காதவகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: