News Just In

11/20/2019 08:14:00 AM

17 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேஸில் மீண்டும் சம்பியனானது

திங்கட்கிழமை (18.11.2019) 17 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான உலகக் கிண்­ணத்தை பிரேஸில் சுவீ­க­ரித்­தது. குறித்த போட்டியானது பிரேஸிலில் உள்ள பெசி­ராவோ விளையாட்டரங்கில் நடை­பெற்றது. இறுதிப் போட்­டி­யின் கடைசிக் கட்­டத்தில் போடப்­பட்ட கோலின் உத­வி­யுடன் மெக்ஸிகோவை 2–1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் பிரேஸில் வெற்­றி­கொண்டது. இது­ பிரேஸில் வென்ற நான்­கா­வது உலக சம்­பியன் பட்டமாகும்.

1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் இருந்த நிலையில் பிரேஸில் அணியின் வீரரொருவருக்கு உபாதை ஏற்பட்டதை தொடர்ந்து மாற்­று­ வீரராக நுழைந்த லஸாரோ போட்ட கோல் பிரேஸில் 17 வயதுக்குட்பட்ட உலக சம்பயினாவதை உறுதிசெய்தது.

No comments: