News Just In

11/20/2019 07:21:00 AM

உத்தியோகபூர்வ அழைப்புக்கமைய சென்ற ஹிஸ்புல்லாஹ்வுக்கு மரியாதையான வரவேற்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
புதிய ஜனாதிபதியின் செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் வரவேற்கப்பட்டு கலந்து கொண்டதாக ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ திங்கட்கிழமை (18.11.2019) பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஹிஸ்புல்லாஹ் வெளியேற்றப்பட்டதாக சமூக வலயத்தளங்களில் உண்மைக்கு புறம்பான போலி செய்தியொன்று பரப்பப்பட்டு வருவதாகவும் அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது அரசியல் விஷமிகளால் உண்மைக்கு புறம்பான விதத்தில் புனையப்பட்ட செய்தியென்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது...

'ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய ஹிஸ்புல்லாஹ் உட்செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றினை வைத்து போலியான செய்தியொன்று சமூக வலயத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கே மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். மாறாக  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி வேட்பாளருமான ஹிஸ்புல்லாஹ்வை மிகவும் மரியாதையுடன் - நாகரீகமாக வரவேற்றிருந்தனர் என அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.‪

No comments: