இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைவிடவும், இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.
தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து அன்னசின்னத்திற்கு வாக்களித்தன் மூலம் இலங்கையில் உரிமை சார்ந்த வேட்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற செய்தியை பன்னாட்டு சமூகத்துக்கும், இலங்கை ஆட்சியயாளர்களுக்கும் எடுத்து கூறியுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தீர்க்கப்படாத தேசிய பிரச்சினைக்கு தீர்வு தருவதாக சஜித் பிரேமதாச கூறியதற்கு அமையவே அவருக்கு அதிகளவான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந் நிலையில், தமிழ் மக்களது வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களுக்கு புதிய ஜனாதிபதி மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புவதாகவும், அவர், அவ்வாறு செயற்படுவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்படுவதன் மூலம், அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும், நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும், அதன்மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும், அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும், அவர் சார்ந்தோருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: