News Just In

10/21/2019 08:14:00 AM

ஜனாதிபதி தேர்தலில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பெப்ரல் அமைப்பின்அமைப்பின் சார்பில் 5,000 ற்கும் அதிகமானோரை ஈடுபடுத்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2,000 கண்காணிப்பாளர்களை ஜனாதிபதி தேர்தலில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. 

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் குறித்த உறுப்பினர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல் தொடர்பிலான முறைபாடுகளை ஏற்பதற்காக அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

கெபே அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 7,500 கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.

No comments: