நியூயோர்க்கிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட குவான்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக விமானத்தில் தொடர்ச்சியாக 19 மணிநேரம் பயணித்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக நீண்ட தூரம் இடைவிடாத பயணித்த பயணிகள் விமானத்திற்கான சாதனையை படைத்துள்ளது.
இந்த விமானத்தில் ஏறக்குறைய 16,000 கிலோமீற்றர் தூரம் பறக்கக்கூடிய அளவிற்கு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் தொடர்ந்து பயணித்த விமானம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சென்றடைந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குவாண்டாஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஆலன் ஜோய்ஸ் பல மாத திட்டமிடலின் பின்னரே இது சாத்தியமானது. விமானத்தில் இருந்த பயணிகள், விமானியின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு வழக்கமான சேவையின் மாதிரிக்காட்சியாகும்.
இந்த விமானத்தை இயக்குவதற்காக இரு விமானிகள் இருக்கும் நிலையில் இம்முறை இந்த விமானத்தில் 4 விமானிகள் பயணித்தனர். 4 விமானிகளும் தங்கள் பணியை மாறி மாறி செய்தார்கள் என்றார்.
No comments: