
வடசென்னைக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய குழந்தைகள் மையத்தினை நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2003-ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தே தனுஷை எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு திருமணம் நடந்ததில் இருந்து நான் அவருக்கு நெருக்கமானவர். தனுஷ் அரசியலுக்கு வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.
தமிழக முதல்வரின் ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை வாசகமே போதுமானது. முதல்வருக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு வேறு யாருக்கும்கிடைக்கவில்லை. இங்கே முதல்வர் விஜய் என்பது தான் யதார்த்தம்.
கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் சேர்த்து, மக்கள் மிகச் சிறந்த ஒரு பாடத்தை வழங்கியுள்ளனர்.
இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது முழுக்க முழுக்க அவரவர்களின் சொந்த முடிவு.
தனுஷை வைத்து அரசியல் களத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், அங்கே திருப்புமுனை எதுவும் இருக்காது, ஏமாற்றம் தான் மிஞ்சும்.
ரஜினிகாந்தை வைத்து பிரச்சாரம் செய்தால் மக்கள் அப்படியே மாறிவிடுவார்கள் என்று சொல்வதற்கெல்லாம் காலம் தக்க பதிலை கொடுத்துவிட்டது. எனவே, யார் பிரச்சாரம் செய்தாலும், மக்கள் ஏற்கெனவே தங்களுடைய தீர்ப்பை முழுமையாக வழங்கிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
No comments: