News Just In

10/24/2026 10:50:00 AM

கந்தளாய் மகாவலி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை!


கந்தளாய் மகாவலி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை!



திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மகாவலி ஆற்றில்,நேற்று  (23) காலை வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த காட்டு யானையொன்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

சங்கன் லங்கா மணல் அகழ்வு இறங்குதுறைக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், குறித்த காட்டு யானை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: