முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால் அவர் தமது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்நேரம் விடுதலையாகியிருப்பார் என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 2017ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தண்டனைக் காலத்தில் ஞானசார தேரர் எந்தவொரு அரசிடமும் பொதுமன்னிப்புக் கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார் என்றும், உயர்நீதிமன்றத்தால் அந்தப் பொதுமன்னிப்பு தற்போது இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன அன்று பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால், ஞானசார தேரர் 2024 அல்லது 2025ஆம் ஆண்டிலேயே தண்டனைக் காலத்தை நிறைவு செய்து விடுதலையாகியிருப்பார் என்றும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகம் இழைத்த தவறுக்காக ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், அரசமைப்பில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி இந்தத் தவறைத் திருத்தி, ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

No comments: