
பொலன்நறுவை, அரலகங்வில பகுதியில் மின்சாரக் கம்பியில் சிக்கி 5 வயது சிறுவனும் 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நேற்று(23.10.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அரலகன்வில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் ஜா-எல, தளுகம பகுதியைச் சேர்ந்தவராகும். அவர் தனது குடும்பத்தினருடன் தயாசிரிகம பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளார்.
சிறுவன் வீட்டின் முற்றத்தில் மற்றொரு சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியுள்ளார்.
இதன்போது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முற்பட்ட வீட்டின் உரிமையாளரான 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையும் மின்சார கம்பியில் சிக்கி காயமடைந்துள்ளார்.
பின்னர் அவர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அரலகன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: