சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: