News Just In

10/20/2026 04:12:00 PM

பாலின சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் மாவட்ட வலையமைப்புக் கூட்டம்

பாலின சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் மாவட்ட வலையமைப்புக் கூட்டம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பாலின சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் மாவட்ட வலையமைப்புக் கூட்டம் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாயன்று (20) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பாலின சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பெண்கள், சிறுவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள், சவால்கள், பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக நிலவும் பாதிப்புகள் தொடர்பில் உயர் அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் துரிதமாச்க செயற்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, தற்காலச் சூழலில் குடும்ப வன்முறைகள், தற்கொலை முயற்சிகள், இளம்பராயக் கர்ப்பம், போதைப்பொருள் பாவனை போன்ற சமூகப் பிரச்சினைகளே பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை நீண்ட காலம் பாரமரிப்பதற்கான பெண்கள் காப்பகம் ஒன்றின் தேவைப்பாடு தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதேச உதவிச் செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள் உட்பட்ட ஆர்வலர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments: