News Just In

10/20/2026 05:46:00 PM

அமரர் வ. அமராவதி வெற்றிக் கிண்ணம் – 2026: சம்பியனான கல்முனை பெஸ்ட் இலவன்!

அமரர் வ. அமராவதி வெற்றிக் கிண்ணம் – 2026: சம்பியனான கல்முனை பெஸ்ட் இலவன்!



நூருல் ஹுதா உமர்

நாவிதன்வெளி சுதந்திரன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த அமரர் வ. அமராவதி வெற்றிக் கிண்ணம் – 2026 டீ-20 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை பெஸ்ட் இலவன் அணி சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்தது.

32 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி, விவேகானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதில் நிந்தவூர் அரபா அணியை எதிர்கொண்ட கல்முனை பெஸ்ட் இலவன் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பதிவு செய்தது.

நாணயச் சுழற்சிக்குப் பின்னர் முதலில் துடுப்பெடுத்தாடிய பெஸ்ட் இலவன் அணி, அரபா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 52 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் அரபா அணி, பெஸ்ட் இலவன் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. இதன்மூலம் கல்முனை பெஸ்ட் இலவன் அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இச்சுற்றுப்போட்டியின் சம்பியனான பெஸ்ட் இலவன் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன. இறுதிப் போட்டியில் சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்திய இம்ரான், போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

32 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியில் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி கல்முனை பெஸ்ட் இலவன் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை அக்கழகத்தின் கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இச்சுற்றுப்போட்டியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய நாவிதன்வெளி சுதந்திரன் விளையாட்டுக் கழகத்தினருக்கும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

No comments: