News Just In

10/14/2026 01:18:00 PM

மட்டக்களப்பு நீதிமன்ற வழக்குக்கு சென்ற சட்டத்தரணிகளினால் பொதுநூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு


மட்டக்களப்பு நீதிமன்ற வழக்குக்கு சென்ற சட்டத்தரணிகளினால் பொதுநூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு



நூருல் ஹுதா உமர்

கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் தாதிய உதவியாளர்கள் ஆடை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த விடயம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்த சட்டத்தரணிகள் குழுவினர், மட்டக்களப்பு பொதுநூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், பன்னூலாசிரியரும், கவிஞரும், சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) நூல்களின் தொகுதியை நீதிமன்ற நூலகரிடம் கையளித்தார்.

இதன்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீன் துல்ஷான் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில் ஆகியோர் உடனிருந்தனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகை தந்த சந்தர்ப்பத்தில் நூல்களை அன்பளிப்பாக வழங்கிய இந்நிகழ்வு, வாசிப்புப் பழக்கத்தையும் அறிவுப் பகிர்வையும் ஊக்குவிக்கும் முயற்சியாக அமைந்தது.

No comments: