மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேரில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது பள்ளிவாசல் மற்றும் ஸியாரத் வளாகத்தில் நிலவும் அடிப்படை வசதிகள் குறித்து நிர்வாகத்தினருடன் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி நடைபெறவுள்ள கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பள்ளிவாசலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இப்பணிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விஜயத்தில் மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத் தலைவர் எம்.ஏ.எம். உவைஸ், செயலாளர் யூ.எல்.ஏ. கரீம் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டு, விழா ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தவிசாளருடன் கலந்துரையாடினர்.
No comments: