மேலும் சம்பவத்தில் இரண்டு சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 37 பேர் காயமடைந்துள்ளதாக காவறதுறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மோதலின்போது சிறைச்சாலையினுள் ஒரு தரப்பினர் தீவைத்த நிலையில் ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த மோதல் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை செய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

No comments: