News Just In

12/26/2025 06:01:00 PM

சுனாமியில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து. மட்டக்களப்பு கல்லடியில். பல நிகழ்வுகள் நடைபெற்றன

சுனாமியில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து. மட்டக்களப்பு கல்லடியில். பல நிகழ்வுகள் நடைபெற்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள்பொதுமக்களும்பங்கேற்பு




(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
சுனாமி கடல் பேரலையில். உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து. மட்டக்களப்பு கல்லடி பகுதியில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. கல்லடி திருச்செந்தூர். டச்பார் நாவலடி பகுதிகளிலும். இந்து கத்தோலிக்க மக்களால். உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக.ஒளியேற்றியும் சமய அனுஷ்டானங்கள். நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வுகளில். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, ஞானமுத்து ,ஸ்ரீநேசன்,இளைய தம்பி. ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் உட்பட. அரசியல் பிரமுகர்கள். கடல் ஆழிப்பேரலையில் உயர்நீத்தவர்களின் உறவினர்கள். மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உயிர் த்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட பிரார்த்தனை வழிபாடுகளும். இந்து,கத்தோலிக் கத்தோலிக்க முறைகளில் நடத்தப்பட்டன.

No comments: