மேலும் ஏழு மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்று காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவர் மேலதிக மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா தாக்கம் இவரது மரணத்திற்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டிருந்கின்றது.
மேலும் கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவர் கடந்த 27 ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயினால் நீண்ட பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா தாக்கம் இவரது மரணத்திற்கான காணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவர் கொரோனா தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
அத்துடன் புத்தளம் பகுதியைச் சேர்ந்த புத்தயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு உயர்குருதி அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா தாக்கம் என்பன இவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சிறுநீரகபாதிப்பு மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா தாக்கம் என்பன இவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் மருதானை பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

No comments: