
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தொலைபேசிக் கம்பத்துடன் மோதியதில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் குருணாகல் - லுணுவில பிரதேசத்தில் நேற்று(26) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: