News Just In

12/29/2025 05:56:00 AM

5000 ரூபாய் விசேட கொடுப்பினை வழங்கும் திட்டம். மட்டக்களப்பில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

5000 ரூபாய் விசேட கொடுப்பினை வழங்கும் திட்டம். மட்டக்களப்பில் வெற்றிகரமாக முன்னெடுப்பு
.மாவட்டத்தில் 8500 தாய்மார்களுக்கு. போசாக்கு


(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க வின் விசேட அறிவுறுத்தலுக்கமைய. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும். பாலூட்டும் தாய்மார்களுக்கு. வழங்கப்படும் விசேட போசாக்கு பொதி வழங்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் அமைச்சர் திருமதி சரோஜா போல் ராஜின் வழிகாட்டுதலில். இந்தத் திட்டம் மாவட்ட மட்டத்தில். முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஊடாக. திட்டம்முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய. மட்டக்களப்பு மாவட்டத்தில். 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும். 8500கர்ப்பிணி மற்றும் பாலூட்டும். தாய்மார் களுக்கு போசாக்கு உணவு பொதிகள்வழங்கப்பட்டுள்ளன இத்திட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில். 1172. தாய்மார்களுக்கு. விசேட போசாக்கு உணவுப்பொதிகள் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கபட்டது..

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு. போசாக்கு உணவு பொதிகளை வழங்கி வைத்தார். செங்கலடி பிரதேச செயலாளர். எஸ் தனபால சிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில். பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சுதாகரன். உள்ளிட்ட பல பிரமுகர்களும் பிரசன்னமாகி யிருந்தனர்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கருத்துரை வழங்குகையில்.;- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுகாதார மேம்பாட்டுக்காக பல நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்திலே. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான வளர்ச்சியிலும் சிறுவர் கல்வியிலும் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றது.

கர்ப்பிணி தாய்மார்களையும் பாலூட்டும் தாய்மார்களையும் பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கின்றது. இத்திட்டத்தின் அடிப்படையில் இந்த போசாக்கு உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளை உணர்ந்து. இந்த அரசாங்கம் திட்டங்களை அமுல் நடத்தி வருகிறது

No comments: