News Just In

12/28/2025 09:51:00 AM

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையின் 30 வது வருடாந்த விடுகை விழா மற்றும் பரிசளிப்பு விழா

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையின் 30 வது வருடாந்த விடுகை விழா மற்றும் பரிசளிப்பு விழா


நூருல் ஹுதா உமர்
பல்லின மாணவர்களின் பல்வகை கலை நிகழ்ச்சிகளுடன் காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையின் 30 வது வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு விழாவும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இன்று (27) சிறப்பாக நடைபெற்றது.விழாவில் பாலர் மாணவர்களின் நடனம், நாடகம், பாடல், கவிதை வாசிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. சிறுவர்களின் திறமைகள் மற்றும் தன்னம்பிக்கை வெளிப்படும் வகையில் அமைந்த நிகழ்ச்சிகள் விழாவிற்கு சிறப்புச் சேர்த்தன.
மேலும் கல்வி, ஒழுக்கம் மற்றும் இணைப்பாட செயற்பாடுகளில் சிறப்பாகத் திகழ்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் மூலம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விழா அமைந்திருந்தது.

நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி. அருணன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான ஏ. சஞ்சீவன், ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் அவர்களும் விசேட அதிதியாக நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்த அல்-மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல். என். ஹுதா உமர் கலந்து கொண்டதுடன் மேலும், ஆலய நிர்வாகத்தினர், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வி ஆர்வலர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மூன்று தசாப்தங்களை கடந்த கல்விச் சேவையில் பாடசாலை வகித்த பங்களிப்பு குறித்து நினைவுகூரப்பட்டதுடன், எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்களும் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டன.

No comments: