மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07.07.2026)ஆம் திகதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (07.07.2026)அதிகாலை 5.00 மணியளவில் திடீரெனப் பரவத் தொடங்கிய இந்தத் தீ, அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, சுமார் 5 வர்த்தக நிலையங்கள் வரை இந்தத் தீ விபத்தில் சிக்கி பெரும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துள்ளதோடு, உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துள்ளதோடு, உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகாத நிலையில், இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
No comments: