News Just In

7/19/2026 06:33:00 AM

பூமியைப் போன்ற வளிமண்டலம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்ற வளிமண்டலம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு!


விண்வெளி ஆய்வாளர்கள், பூமியைப் போன்ற பாறை அமைப்பைக் கொண்ட ஒரு கிரகத்தைச் சுற்றியுள்ள முதன்மை வளிமண்டலத்தை முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

சூரியக் குடும்பத்திற்கு அப்பால், பூமியைப் போன்ற சூழல் கொண்ட உலகம் இருப்பதற்கான மிக வலுவான ஆதாரமாக இது கருதப்படுகிறது.

பூமியிலிருந்து சுமார் 48 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகம், நம் சூரியனை விட அளவில் சிறிய மற்றும் குளிர்ச்சியான சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.

இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் 'ஹீலியம்' வாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹீலியம் உயிரினங்களின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவாது என்றாலும், அதற்கு அடியில் அடர்த்தியான பிற வாயுக்கள் காணப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விண்வெளி ஆய்வில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.

No comments: