News Just In

9/26/2026 03:12:00 PM

காத்தான்குடி நகர சபையினர் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் அத்துமீறி வரிஅறவிடுவது குற்றமாகும்! மாநகர சபைமுன்னாள்முதல்வர்

  காத்தான்குடி நகர சபையினர் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் அத்துமீறி வரிஅறவிடுவது குற்றமாகும்! மாநகர சபைமுன்னாள் முதல்வர்



காத்தான்குடி நகர சபையினர் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் அத்துமீறி வரி அறவிட்டு வருகின்றனர். இதில் காத்தான்குடி மாநகர சபையினர் பாரிய முரண்பாட்டை மட்டக்களப்பு மாநகர சபையினருக்கு உண்டு பண்ணி வருவது குற்றமாகும்.

மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைப் பதாகையானது காத்தான்குடி வரவேற்பு தூபியின் உள்ளேயே அமைந்துள்ளது. அவ்வாறு இருக்க. காத்தான்குடி நகர சபையினரின் இந்த நடவடிக்கை அத்துமீறிய செயலாகும்.
மஞ்சந்தொடுவாய் 16 ஆம் வட்டாரத்தில் இருந்து எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சட்டத்தின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி தேர்தல் மூலம் மட்டக்களப்பு மாநகர சபைக்குப் பிரதிநிதி (16 ஆம் வட்டாரத்தில்) தேர்ந்தெடுக்கப்படுகின்றர்.
ஒரு (16 ஆம் வட்டாரம்) பிரதிநிதி மட்டக்களப்பு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் போது அந்தப் பிரதிநிதியின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்னொரு உள்ளூராட்சி மன்றம் (காத்தான்குடி நகர சபை) வரி அறவிட்டது குற்றமாகும்.
காத்தான்குடி நகர சபையின் எல்லைக்கு வெளியே உள்ள ஒரு சொத்து வெறுமனே காத்தான்குடிக்கு அருகில் இருக்கிறது என்பதற்காக காத்தான்குடி நகர சபையின் வரி வரம்புக்குள் வந்துவிடாது.
இதற்கு மட்டக்களப்பு மாநகர சபை சட்ட நடவடிக்கை எடுப்பதுடன். கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
2022 ஆம் ஆண்டும் இவ்வாறான பிரச்சினை ஏற்படுத்தப்பட்டது. அதனை நாங்கள் தடுத்து நிறுத்தியிருந்தோம்.

No comments: