News Just In

9/23/2026 05:52:00 AM

220 ஆண்டு சிறைத் தண்டனை : ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் வெளியிட்ட கருத்து

220 ஆண்டு சிறைத் தண்டனை : ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் வெளியிட்ட கருத்து



2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 15 பேருக்கும், தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தீர்ப்பளித்தது.

அத்துடன், தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்தே குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சிறைச்சாலை பேருந்தில் ஏறியநிலையில்

இந்நிலையில், குற்றவாளிகள் குறித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

அதில் இரு குற்றவாளிகள் சிறைச்சாலை பேருந்தில் ஏறியநிலையில் இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான அநியாயமான தீர்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: