News Just In

9/23/2026 04:13:00 PM

ஈஸ்டர் தாக்குதல்! தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை இப்ராஹிம் கூறியுள்ள விடயம்

ஈஸ்டர் தாக்குதல்! தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை இப்ராஹிம் கூறியுள்ள விடயம்



தான் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சந்தேகநபர் அல்ல என ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையும், பிரபல வாசனைப் பொருள் வர்த்தகருமான மொஹமட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இணையவழி ஊடகச் சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கோரினார்.

ஒரு வர்த்தகராக கிறிஸ்தவ சமூகத்துடன் பல ஆண்டுகளாக இணக்கமான உறவைப் பேணி வந்ததாகவும், பௌத்த ஆலயங்களில் தூபிகள் மற்றும் பிரசங்க மண்டபங்கள் அமைப்பதற்கும், பௌத்த பிக்குகளின் கல்விக்காக புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் தான் பங்களிப்புச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாடசாலை செல்லும் வயதுடைய தனது இளைய மகன் ஏன் இன்னும் விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதற்கான காரணம் தனக்குத் தெரியாது என்று கூறிய அவர், இவ்விவகாரம் குறித்து தான் மிகுந்த கவலையும் மன உளைச்சலும் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: