News Just In

9/22/2026 03:18:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பமானது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பமானது!




உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) நண்பகல் 12.27 க்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட விசேட நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமானது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையிலேயே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, நீதிமன்றத்தினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு மதிய உணவு இடைவேளை வழங்கப்பட வேண்டியிருந்ததால், வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) பிற்பகல் 1.45 வரை ஒத்திவைக்கப்பட்டது.

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 குண்டுதாரிகளுக்குத் துணைபுரிந்தமை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments: