News Just In

9/23/2026 04:16:00 PM

திருகோணமலை விடுதியில் அதிரடி சுற்றிவளைப்பு! நால்வர் கைது


திருகோணமலை விடுதியில் அதிரடி சுற்றிவளைப்பு! நால்வர் கைது





திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொழில் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உவர்மலை பகுதியில் உள்ள குறித்த விடுதி இன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதியின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் 54 வயதுடைய ஆண் ஒருவரும், 48, 43 மற்றும் 38 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: