ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து மிகக் கடுமையாக அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையை, அமெரிக்கப் படைகள் தடையின்றித் தொடர்ந்து வருகின்றன.
இந்த முற்றுகையின் ஒரு பகுதியாக, இதுவரை 5 கப்பல்களை வேறு திசைக்கு மாற்றியிருப்பதாகவும், ஒரு கப்பலை செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.
No comments: