இன்றைய தினம் (செப்டம்பர் 26, 2026) தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது நினைவு தினம் அனுட்டிக்கப்படுகிறது.சிவில் சமூகம் மட்டக்களப்பு மாநகர சபையினர் காந்திப் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது
இந்திய அரசு தமிழினத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் அகிம்சை முறையில் நீரும் உணவும் இன்றித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் திலிபன் அவர்கள். தொடர்ந்து 12 ஆவது நாள் உண்ணா நோன்பால் உயிர் பிரிந்தது.இலங்கைத் தமிழ் இனத்தின் விடியலுக்காய் உயிர்நீத்தவர் தியாக தீபம் திலிபன் .
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், வைத்தியர் சிறிநாத் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாநகர முன்னாள் முதல்வர் பிரதேச சபைகளின் தவிசாளர்கள்ஆகியோர் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments: