News Just In

7/18/2026 01:32:00 PM

இறுதிச்சடங்கில் காவல்துறையின் இறுதி மரியாதையை இழந்த சி. டி. விக்ரமரத்ன!

இறுதிச்சடங்கில் காவல்துறையின் இறுதி மரியாதையை இழந்த சி. டி. விக்ரமரத்ன!


உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு, முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறை நெறிமுறைகளின்படி, உயிரை மாய்த்துக் கொள்ளும் எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் மரியாதை செலுத்துவதற்கு உரிமை இல்லை என்று கூறப்படுகிறது.

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை ஆய்வு செய்யும் பாணியில் பெற்று பின்னர், தன்னை தானே சுட்டுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த நேரத்தில், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர, முன்னாள் காவல்துறை மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே காவல்துறையினர் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: