–
நூருல் ஹுதா உமர்
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) ஏற்பாட்டில் 08 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மருதமுனை பிரீமியர் லீக் (MPL) 2026 மின்னொளி மென்பந்து கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்று (03) இரவு மருதமுனை மஷ்ஹூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஏ. மனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கழக நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் PLT தண்டர்ஸ் அணி, டில்கோ சூப்பர் கிங்ஸ் அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி MPL 2026 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய PLT தண்டர்ஸ் அணி, 7 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 51 ஓட்டங்களை பெற்றது. அந்த அணியின் சார்பில் பசான் 21 ஓட்டங்களையும், எம்.எஸ்.எம். ஹனான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
52 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய டில்கோ சூப்பர் கிங்ஸ் அணி, 7 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டங்கள் மட்டுமே பெற்றதால் தோல்வியைத் தழுவியது. முதல் 09 பந்துகளுக்கும் எவ்வித ஓட்டங்களும் பெறாமல் தடுமாறிய அந்த அணியின் சார்பில் முஹாஸ் அப்துல் 23 ஓட்டங்களையும், சஜத் கபூர் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி பந்துக்கு 04 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓட்டங்களை பெறாமல் டில்கோ சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் சிறப்பாக விளையாடிய எம்.எஸ்.எம். ஹனான் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இறுதிப்போட்டியைத் தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் தனிநபர் விருதுகள் வழங்கப்பட்டன. போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்திய மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் MPL 2026 ஏற்பாட்டுக் குழுவும் பாராட்டப்பட்டன. உள்ளூர் கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொணரவும், மருதமுனையை இலங்கையின் முக்கிய கிரிக்கெட் மையங்களில் ஒன்றாக உருவாக்கவும் MPL தொடர் முக்கிய பங்காற்றி வருவதாக நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments: