News Just In

1/25/2026 08:48:00 AM

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் பெரும் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராவார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் பெரும் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராவார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சியின் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க்.




(எஸ்.அஷ்ரப்கான்)
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் பெரும் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராவார்கள் - சாதாரண பொதுமக்கள் அரசியலில் இருந்து விலக நேரிடும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருப்ப‌து ஏற்றுக்கொள்ள‌ முடியாத‌ ஒன்றாகும்.

இவ்வாறு ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சியின் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக தொடர்ந்தும் அவர் குறிப்பிடும் போது,
பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வி என்ப‌து தொழில் அல்ல‌, அது ம‌க்க‌ள் சேவையாகும். ம‌க்க‌ள் சேவை செய்வோர் ச‌ம்ப‌ள‌ம் கூட‌ எதிர்பார்க்க‌ கூடாது. இந்த‌ நிலையில் அவ‌ர்க‌ளுக்கு ஓய்வூதிய‌ம் கொடுப்ப‌து ம‌க்க‌ள் மீது ஏற்ப‌டுத்த‌ப்ப‌டும் சுமையாகும்.

இன்றைய‌ தேர்த‌ல் முறைப்ப‌டி பெரும்பாலும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் அல்ல‌து ப‌ண‌க்கார‌ர்க‌ளின் உத‌வி இல்லாம‌ல் ஒருவ‌ரால் தேர்த‌லில் வெல்ல‌ முடியாது என்ப‌தே ய‌தார்த்த‌ம்.

ஓய்வூதிய‌ம் ர‌த்து செய்ய‌ப்ப‌ட்டால் ப‌ண‌க்கார‌ர்க‌ள் தேர்த‌லில் போட்டியிடுவ‌து குறையும். கார‌ண‌ம் ப‌ண‌ம் உள்ள‌வ‌ன் மேலும் ப‌ண‌ம் சேர்ப்ப‌தைத்தான் விரும்புவான். ஓய்வூதிய‌ ப‌ண‌ம் இல்லையென்றால் ப‌ண‌க்கார‌ன் பாராளும‌ன்ற‌த்துக்கெல்லாம் போக‌ நினைக்காம‌ல் த‌ன் சொந்த‌ தொழிலை பார்ப்பான்.

இந்த‌ நிலையில் ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ வேண்டும் என்ற‌ தியாக‌ எண்ண‌ம் கொண்ட‌ சாதார‌ண‌ ம‌க்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஆவ‌த‌ற்கு இட‌முண்டு.

எம்மை பொறுத்த‌ வ‌ரை பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு மாத‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌தும் நிறுத்த‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் பாராளும‌ன்றுக்கு வ‌ரும் அம‌ர்வுக‌ளுக்கு ம‌ட்டும் கொடுப்ப‌ண‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தே ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் நிலைப்பாடாகும்.

ஆக‌வே பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஓய்வூதிய‌த்தை நிறுத்த‌ முய‌ற்சிக்கும் இந்த‌ அர‌சாங்க‌த்தின் ந‌ட‌வ‌டிக்கை மிக‌வும் சிற‌ந்த‌தாகும்.

No comments: