உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு, தொழுநோய் தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,நேற்று (24) சாய்ந்தமருது நகரில் விசேட விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு நடைபவனியை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், நிகழ்வின் ஏற்பாட்டுப் பிரதானியாக கல்முனை பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ரிஸினி முத், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: