மலையக மரக்கறிகளின் விலைகள் மலையளவு உயர்ந்ததால் உணவுப் பார்சல்களின் விலைகள் 50 ரூபாவினால் அதிகரிப்பு
சமீப சில நாட்களாக ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொதிகளின் விலையையும் 50 ரூபாவினால் அதிகரித்து விற்பதாக ஹோட்டல் காரர்கள் தெரிவிக்க்pன்றனர். கிழக்கு மாகாணத்தில் இந்த நிலைமை காணப்படுகிறது.
மலையகத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்குக் கொண்டு வந்து விற்கப்படும் மரக்கறிகளின் விலைகள் மலையளவு உயர்ந்துள்ளதே இவ்வாறு தாம் உணவுப் பொதிகளின் விலையை அதிகரித்தமைக்குக் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக பிரைட் ரைஸ் தயாரிப்பதற்குச் சேர்க்கப்படும் லீக்ஸ், கரட், தக்காளி, போஞ்சி, கோவா உள்ளிட்ட மரக்கறிகள் உட்பட கறிகளுக்குத் தேவையான ஏனைய பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறிகள் கிலோ ஆயிரம் ரூபாவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே இஞ்சி, புளி, மாசி, உள்ளிட்ட கறிக்குத் தேவையான பொருட்கள் கிலோகிராம் 3000 ஆயிரம் ரூபா, தேங்காய் ஒன்று 300, உப்பு ஒரு கிலோ 400, மரக்கறி எண்ணெய் ஒரு லீற்றர் 1000 ரூபாய் என்றவாறு உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் இப்பொழுது மரக்கறிகளின் விலையும் மலையளவு உயர்ந்துள்ளன.
இதனால் அன்றாடங் காய்ச்சிகளான சாதாரண ஏழைகள் ஒருவேளை உணவைத் தயாரிப்பதற்காக சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்
No comments: