News Just In

5/04/2025 03:45:00 PM

அட்டாளைச்சேனை மஸ்ஜிதுஸ் ஷறப் பள்ளிவாசலின் மேல்தள நிர்மாண பணிகளுக்காக எச்.எம்.எம்.ஹரீஸ் நிதி ஒதுக்கினார் !

அட்டாளைச்சேனை மஸ்ஜிதுஸ் ஷறப் பள்ளிவாசலின் மேல்தள நிர்மாண பணிகளுக்காக எச்.எம்.எம்.ஹரீஸ் நிதி ஒதுக்கினார் !


நூருல் ஹுதா உமர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டம் முழுவதிலும் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக அட்டாளைச்சேனை மஸ்ஜிதுஸ் ஷறப் பள்ளிவாசலின் மேல்தள நிர்மாண பணிகளுக்காக தனது டீ- 100 திட்டத்தின் கீழ் நிதியொதுக்கியிருந்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் 18 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வரும் இந்த மஸ்ஜிதுஸ் ஷறப் பள்ளிவாசலின் மேல்தள நிர்மாண பணிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன் மேலும் இந்த பள்ளிவாசலில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களிடம் இப்பள்ளிவாசலின் நிர்மாணப்பணி தேவைகளை முன்மொழிந்து நிதியை பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்த சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் ஆலோசகர் எம்.ஜே.எம். அன்வர் நௌஸாத், வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

No comments: