மட்டக்களப்பில் பொதுஜன பெரமுன கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாட்டின் ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அந்தவகையில், மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – காத்தான்குடி, பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதியில் அமைந்திருந்த கட்சி அலுவலகம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் கட்சி அலுவலகம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் காரணமாக அலுவலகத்தின் கண்ணாடிகள் முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன் அங்கு கட்டப்பட்டிருந்த விளம்பர பதாதைகளும் தாக்குதல் நடத்தியவர்களினால் அளிக்கப்பட்டுள்ளதையும். அவதானிக்க முடிந்தது
தாக்குதல் நடந்த சம்பவ நேரத்தில் அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை என்பதினால் உயிராபத்துகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments: