News Just In

11/17/2024 09:22:00 AM

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை..!

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை..!



2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளது.

இதேநேரம் 2024ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: