(அஸ்ஹர் இப்றாஹிம்)
பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.நபீஸ் முஹம்மத் அவர்களின் வேண்டுகோளுக்கமைய பாடசாலையில் நீண்ட காலமாக இயங்காமல் கைவிடப்பட்ட பற்சிகிச்சைப் பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளன..
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் , பிராந்திய பற்சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர். ஹபீப் ஆகியோரின் உதவியுடன் பொத்துவில் மத்திய கல்லூரியின் பற்சிகிச்சைப் பிரிவிற்கு புதிதாக பற் சிகிச்சை நிபுணர்( School Dental Therapist) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இயந்திரங்கள் மீள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உயிரியல் மருத்துவ பிரிவின் பொறியியலாளர் முஹம்மட் இப்ஹாம் அவர்களின் உதவியுடன் பொருத்தப்படவுள்ளன..
No comments: