News Just In

9/07/2024 03:56:00 PM

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட தொடரில் உரும்பிராய் ஈகிள்ஸ் அணி சம்பியனானது

இளவாலை வருத்தப்படாத வாலிபர் கிண்ண கிரிக்கெட் சமரில்
உரும்பிராய் ஈகிள்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கம் தனது 11 வது ஆண்டை முன்னிட்டு நடாத்திய 32 அணிகள் பங்கேற்ற மாபெரும் கிறிக்கட் இறுதிப் போட்டியில் உரும்பிராய் ஈகிள்ஸ் அணியை எதிர்த்து ஜப்னா மாஸ்டர்ஸ் அணி மோதியது .

முதலில் துடுப்பெடுத்தாடிய உரும்பிராய் ஈகிள்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 06 பந்து வீச்சுக்களில் 02 விக்ட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களை பெற்றது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா மாஸ்டர்ஸ் அணி 06 ஓவர்களில் 05 விக்கட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைய சம்பியன் கிண்ணம் உரும்பிராய் ஈகிள்ஸ் அணி வசமானது

ஆட்டநாயகனாக உரும்பராய் ஈகிள்ஸ் அணி வீரர் மோகன்றாஜ் தெரிவானார் ..

No comments: