தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தமிழ்ப் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தெளிவாக இருக்கின்றனர் என்றும் – இது இன்னொரு தென்னிலங்கை வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கான முயற்சி எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், மறுபுறம் அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புதிய தலைவருக்கான தெரிவில் அதிக வாக்குகளில் வெற்றி பெற்றவரான சிறீதரன் ஆகியோர் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்து வருகின்றனர். உண்மையில், தமிழ் அரசுக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது? – அது ஒரு கட்சியாக இருக்கின்றதா? – ஒவ்வொரு வரும் ஒவ்வொன்றைப் பேசும் கட்சியாக இருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் வடக்கு – கிழக்கில் அதிகம் உள்ளுக்குள் பலவீனமாக இருக்கின்ற கட்சியாக தமிழ் அரசுக் கட்சியே இருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தென்னிலங்கையில் இன்னொருவரை வெற்றிபெறச் செய்வதற்கான செயல்பாடு என்றால் – அந்த வேட்பாளர் யார்? அப்படியானால் அந்த வேட்பாளரின் வெற்றிக்குப் பதிலாக தமிழ் அரசுக் கட்சி பிறிதொருவரின் வெற்றியை விரும்புகின்றது என்பதுதானே பொருள்?
No comments: