News Just In

8/23/2024 08:39:00 PM

கிழக்கு மாகாண மட்ட தமிழ்த் தினப் போட்டியில், மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம்!




கிழக்கு மாகாண மட்ட தமிழ் தின போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்ற நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

17 கல்வி வலயங்கள் போட்டியிட்ட தமிழ்;த் தின போட்டி நிகழ்வுகளில், மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. 15 முதல் இடங்களையும் 6 இரண்டாவது இடங்களையும் 5 மூன்றாவது இடங்களையும், மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து போட்டியிட்ட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

சாதனை படைத்த மாணவர்களையும், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகவளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உதவி கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ், கோட்டக்கல்வி பணிப்பாளர் பிரபாகரன் உட்பட வலய கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: