News Just In

8/23/2024 08:25:00 PM

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கொழும்பு நோக்கிச் பயணித்த சிறிய ரக பட்டா லொறி ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவை உள்ளக மாறும் கடவைக்கு சமீபமாக 1.7 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் கவிழ்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபகாலமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன விபத்து அதிகரித்துள்ளதால் வாகன சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு வீதி போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகவும், நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதனாலேயே விபத்துக்கள் சம்பவங்கள் ஏற்படுவதாகவும் பொலிஸார் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

No comments: