(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு,கல்லடி உப்போட சிவானந்தா தேசிய கல்லூரியில் மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மல்யுத்த வீரர்களின் உணவு விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான கலந்துரையாடலொன்று அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.கல்லூரியின் பழைய மாணவரான டொக்டர் சி. விவே அவர்கள் வீரர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் விளக்கமாக விரிவுரையினை நிகழ்த்தினார்.
இக் கருத்தரங்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments: